பிரதமரின் கிசான் பென்ஷன் திட்டத்தில், விவசாயிகள் மாதம் ரூ.100 செலுத்தினால் அரசும் தனது பங்குக்கு ரூ.100 செலுத்தும். இத்திட்டத்தில் சேரும் விவசாயிகள் தனது 60 வயதில் மாதம் ரூ.3 ஆயிரம் பென்ஷன் பெறலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இரண்டாவது முறையாக பதவியேற்ற பிரதமர் மோடியின் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில், விவசாயிகளுக்கு தனி பென்ஷன் திட்டம் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த புதிய திட்டம் குறி த்து மாநில வேளாண் அமைச்சர்களிடம், மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசித்தார். இத்திட்டத்தை மாநிலங்களில் தொடங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
18 முதல் 40 வயதுடைய விவசாயிகளை இத்திட்டத்தில் சேர்க்க விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி அவர் வலியுறுத்தினார். 29 வயதான விவசாயி ஒருவர் இத்திட்டத்தில் சேர்ந்தால் மாதம் ரூ.100 செலுத்த வேண்டியிருக்கும்.
வயதுக்கு ஏற்ப இந்த பிரீமியம் தொகையில் மாறுபாடு இருக்கும்.
விவசாயிகள் செலுத்தும் மாத ப்ரீமியம் தொகைக்கு, சம அளவிலான தொகையை மத்திய அரசு, இத்திட்டத்தில் சேரும் விவசாயிகளின் கணக்கில் செலுத்தும். இந்த பென்ஷன் திட்டத்தை ஆயுள் காப்பீட்டு கழகம்(எல்.ஐ.சி) நிர்வகிக்கும். பென்ஷன் வழங்கும் பொறுப்பும் எல்.ஐ.சியைச் சார்ந்தது.
இத்திட்டத்தின் பயனாளிகள் 60 வயதில் குறைந்தபட்சம் மாதம் ரூ.3 ஆயிரம் பென்ஷன் பெறலாம். விவசாயிகள் தங்களின் மாத பங்களிப்பை, பிரதமரின் கிசான் திட்டம் மூலம் அரசிடம் பெறும் நிதியிலிருந்து நேரடியாக செலுத்த அனுமதிக்கப்படுவர்.
ஆன்லைன் மூலம் குறைதீர்ப்பு வசதிகள் செய்யப்படுவதால், இந்த பென்ஷன் திட்டத்தில் முழு வெளிப்படைதன்மை இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment