10ம் வகுப்பு படித்தவர்களுக்கு பாதுகாப்புத் துறையில் வேலை! கொட்டிக்கிடக்கும் வாய்ப்பு! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 8, 2019

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு பாதுகாப்புத் துறையில் வேலை! கொட்டிக்கிடக்கும் வாய்ப்பு!

மத்திய பாதுகாப்புத்துறையான டிஆர்டிஓ (DRDO)-வில், டெக்னீசியன் - 'A' பிரிவு பணிகளில் பணிபுரிவதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:

டெக்னீசியன் - 'A' பிரிவு பணிகள்

காலிப்பணியிடங்கள்:

மொத்தம் = 351 காலிப்பணியிடங்கள்
முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 03.06.2019


ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.06.2019
வயது வரம்பு:

குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 28 வயது வரை இருக்க வேண்டும்.

ஊதியம்:

தொடக்க ஊதியமாக, ரூ.28,000 மாதச் சம்பளம் வழங்கப்படும்.
தேர்வுக்கட்டணம்:

எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / பெண்கள் / PWD / ESM போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / பெண்கள் / PWD / ESM போன்றோர் தவிர மற்ற பிரிவினர் - ரூ.100
கல்வித்தகுதி:

குறைந்தபட்சமாக, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது அதற்கிணையான படிப்பில் தேர்ச்சி மற்றும் ஐடிஐ பயிற்சி சான்றிதழ் படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில், https://www.drdo.gov.in/drdo/ceptam/ceptamnoticeboard.html # - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை:

1. கம்ப்யூட்டர் வழித்தேர்வு

2. ட்ரேடு டெஸ்ட் (Trade Test)

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற,

https://www.drdo.gov.in/drdo/ceptam/download/advttech09.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment