பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எந்நேரமும் மொபைல் குடுப்பது சரியா? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 8, 2019

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எந்நேரமும் மொபைல் குடுப்பது சரியா?

தங்களது குழந்தைகளின் உடல்நலத்தில் தொழில்நுட்ப கருவிகளின் திரைகள் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்று சரிவர பரிசோதித்த பெற்றோர்கள் பெரியளவில் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


தொழில்நுட்ப கருவிகளுடன் குழந்தைகள் செலவிடும் நேரமானது, அவர்களது தூக்கம், உடற்பயிற்சி, குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தை எந்த வகையில் பாதிக்காத வகையில் இருக்கவேண்டுமென்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகள் எப்போதெல்லாம் அலைபேசி போன்ற தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தலாம் என்பதற்கு தக்க வரப்புகளை பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டுமென்றும், குறிப்பாக படுக்கைக்கு செல்வதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு கண்டிப்பாக அதை அனுமதிக்கக்கூடாது என்றும் மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள்.


இந்நிலையில், 14 வயதுடைய இருபாலின குழந்தைகளை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வொன்றில், சமூக வலைதளங்களை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய மன உளைச்சல் சிறுவர்களை விட சிறுமிகளுக்கு இரண்டு மடங்கு அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment