தமிழகத்தில் 11 ஆயிரம் மருத்துவர்களின் கதி என்ன..? பரபரப்பின் உச்சகட்டத்தில் மருத்துவமனைகள் - உண்மையில் என்ன நடந்தது.? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 3, 2019

தமிழகத்தில் 11 ஆயிரம் மருத்துவர்களின் கதி என்ன..? பரபரப்பின் உச்சகட்டத்தில் மருத்துவமனைகள் - உண்மையில் என்ன நடந்தது.?

70 வயதுக்கும் மேற்பட்ட 11 ஆயிரம் மருத்துவர்கள், தங்களது விபரங்களை புதுப்பித்துக் கொள்ளாததால் அவர்கள் மருத்துவம் செய்வதற்கு தகுதியற்றவர்கள் என்று தமிழ்நாடு மருத்துவக்கவுன்சில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மருத்துவக்கவுன்சிலில், 1.38 இலட்சம் மருத்துவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில் 70 வயதுக்கும் மேற்பட்டோர் 15 ஆயிரம் பேர் உள்ளனர்.

அதிலும் 90 வயதைத் தாண்டியும் பல மருத்துவர்கள் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து மருத்துவப் பணிகளை மேற்கொள்ள உரிய ஆவணங்களுடன் மருத்துவக்கவுன்சிலின் பதிவேட்டில் தங்களது விவரங்களை புதுப்பித்துக் கொள்ளுமாறுஅறிவிக்கப்பட்டது.

இதற்கு மார்ச் இறுதி வரை காலஅவகாசம் கொடுக்கப்பட்டது.

அவ்வாறு பதிவு செய்வோர் மட்டுமே தொடர்ந்து மருத்துவப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 70 வயதுக்கு மேற்பட்ட 11 ஆயிரம் மருத்துவர்கள், இந்தப் பதிவேட்டில் தங்கள் ஆவணங்களை சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ள வில்லை என்று மருத்துவக்கவுன்சில் தெரிவித்துள்ளது.

அணுக முடியாத மற்றும் செயலற்றசூழலில் அவர்கள் இருப்பதாக பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே அவர்களது பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது.அதில் 300 பேர் காலமாகிவிட்டதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment