எல்கேஜி முதல் பிஎச்டி வரை பெண்களுக்கு இலவசக் கல்வி! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 3, 2019

எல்கேஜி முதல் பிஎச்டி வரை பெண்களுக்கு இலவசக் கல்வி!

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையிலான அரசு, பெண்களுக்கு எல்கேஜி முதல் பிஎச்டி படிப்பு வரை இலவசக் கல்வியை அறிவித்துள்ளது.

அரசுப் பள்ளிகள் அனைத்திலும் எல்லா மாணவர்களுக்கும் அடுத்த கல்வியாண்டில் இருந்து புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும். நடப்பு கல்வியாண்டுக்கு உரிய பாடப்புத்தகங்களை ஆன்லைனில் இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாபில் முந்தைய அரசு காலிசெய்த எல்கேஜி வகுப்புகள் மீண்டும் அடுத்த ஆண்டுமுதல் தொடங்கப்படும். மாநிலம் முழுவதும் 13 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள், 48 கல்லூரிகளில் இலவச வைபை இணைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது


2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி பஞ்சாபின் கற்றறிந்தோர் சதவீதம் 75.84. இது தேசிய அளவான 73 சதவீதம் என்பதைக் காட்டிலும் அதிகம்தான்.

பஞ்சாப்் மாநிலத்தில் கல்வி அறிவு பெற்ற ஆண்கள் 80.44 சதவீதம் பேர். பெண்கள் 70.70 சதவீதம் பேர். எனவேதான் பெண்களுக்கு இந்த சலுகையை முதலில் அறிவித்துள்ளது அரசு.

No comments:

Post a Comment