பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.06.19 - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 10, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.06.19

திருக்குறள்


அதிகாரம்:ஒப்புரவறிதல்

திருக்குறள்:214

ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

விளக்கம்:

உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவுபவனே உயிரோடு வாழ்பவன். உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.

பழமொழி

Variety is the spice of life

மாற்றம் என்பது மானிடத்தத்துவம்.

இரண்டொழுக்க பண்புகள்

1. போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால் எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.

2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப் படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.

பொன்மொழி

மாற்றம் என்ற ஒன்றை நம்மில் தினிக்கப்படும் முன் நாமே காலத்திற்கேற்ப மாற வேண்டும் ....
            -  கௌதம புத்தர்

பொது அறிவு

* தமிழகத்தில் காடுகளின் பரப்பு எவ்வளவு?                                        

17.58 %

*  கோதாவரி நதி உற்பத்தியாகும் இடத்தின் பெயர் என்ன?

நாசிக்

ஆரோக்ய வாழ்வு

ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை  1 டீஸ்பூன்   நெய்யில் வதக்கி மிளகு  மற்றும்  சீரகம்  பாெடித்துப்  பாேட்டு தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட இரத்தத்தில் ஹீமாேகுளாேபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்

Some important  abbreviations for students

* NEET - National Eligibility cum Entrance Test
 
* CAT -  The Common Admission Test


*இன்றைய கதை*

*ஆந்தை பெற்ற சாபம்*

 கற்பூரவள்ளி என்ற காட்டில் ஆந்தை குடும்பம் ஒன்று வாழ்ந்து வந்தது. ஆந்தைக்கு இரண்டு ஆந்தை குஞ்சுகள் இருந்தன.


ஆந்தைக் குஞ்சுகள் வளர வளர அம்மாவிடம் பல கேள்விகள் கேட்க ஆரம்பித்தன. ஒரு நாள்  ஒரு ஆந்தைக்குஞ்சு அம்மா எல்லோரும் பகலில் தான் உலாவிக் கொண்டிருக்கின்றனர். நாம் மட்டும் பகலில் தூங்கிவிட்டு இரவில் இரை தேடுகிறோம். இது ஏன்? என்றது.

 நமக்கு பகலில் கண் தெரியாது. இரவில் தான் கண் தெரியும்.


அதனால் தான் நாம் பகலெல்லாம் துங்கிவிட்டு இரவில் சென்று இரை தேடுகிறோம் என்றது தாய் ஆந்தை. ஏன் கடவுள் நம்மை மட்டும் இப்படி படைத்தார்? என்று கேட்டது இன்னொரு ஆந்தை குஞ்சு. கடவுள் மேல் தவறில்லை.


 முன்னொரு காலத்தில் நம்முடைய முன்னோர்களில் ஒருவர் செய்த தவறைத்தான் நாம் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்றது தாய் ஆந்தை. அப்படி என்ன தவறு செய்தார்? என்று கேட்டன குஞ்சுகள்.

 ஒரு முறை நம் முன்னோர் ஒருவர் காகத்திடம் நட்பாக இருந்தார். ஒரு நாள் அந்த காகத்திற்கு உடல்நிலை சரியில்லை.


அதனால் காட்டில் டாக்டராக இருந்த குயில் டாக்டரிடம் காக்காவிற்கு வைத்தியம் பார்த்து குணமாகிவிட்டது. அதன் பிறகு டாக்டருக்கு பீஸ் கொடுக்கணும் இல்லையா? ஆனால்இ இவர்கள் எங்களிடம் பணம் இல்லை என்று சொல்லிவிட்டு ஓடிவந்துவிட்டனர்.

 அதன் பிறகு இவர்கள் இருவரையும் பார்க்கும்பொழுதெல்லாம் பணம் கேட்க ஆரம்பித்தது குயில் டாக்டர். குயில் டாக்டருக்கு பயந்து நம்முடைய பாட்டனாரான ஆந்தையார் பகலில் தலைகாட்டாமல் நன்றாக தூங்கிவிட்டு இரவில் எழுந்து வெளியே செல்வார்.


இப்படியே இருந்ததால் குயில் டாக்டரால் ஆந்தையாரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் கோபமடைந்த குயில் டாக்டர் காக்காவை பிடித்து நன்கு திட்டி இனிமேல் எங்கள் இனத்தார் இடும் முட்டைகளை எல்லாம் உன் இனத்தார் தான் காவல் காக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டது.

 அன்றிலிருந்து குயில் இனத்தார் முட்டைகளை காக்கை இனம் வளர்த்து கொண்டு வருகிறது.

 நம்முடைய இனத்தார் பகலில் தூங்கி தூங்கியே நமக்கு பகலில் கண் தெரியாமல் போய்விட்டது என்றது தாய் ஆந்தை. அம்மா பிறரை ஏமாற்றுவதால் ஏற்படும் கஷ்டம் காலம் காலமாக பலரை பாதிப்பதை புரிந்து கொண்டோம்.


இனிமேல் நாங்கள் ஒருநாளும் இப்படிப்பட்ட காரியத்தை செய்யவே மாட்டோம் என்றது அந்த இரு ஆந்தைக்குஞ்சுகள். செல்லமாக தன் குஞ்சுகளை அணைத்து முத்தமிட்டது தாய் ஆந்தை.

*நீதி* :
பிறரை ஏமாற்றினால் நமக்கு தண்டனை தானாக வந்து சேரும்.

இன்றைய செய்திகள்

11.06.2019

* தமிழகத்தில் மேற்கு, தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை அய்வு மையம் அறிவிப்பு.

* மருத்துவர்கள் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்காக, நாடு முழுவதும் 75 மாவட்ட மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக மாற்றுவதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

* டெல்லியில் வரலாறு படைத்தது வெயில்: 118.4 டிகிரியாக பதிவு

* பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ரஃபேல் நடால் 6-3, 5-7, 6-1, 6-1 என்கிற செட் கணக்கில் வெற்றி பெற்று 12- வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்

இந்திய அணியின் அதிரடி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திங்கள்கிழமை (ஜூன் 10, 2019) ஓய்வு பெற்றார்.

Today's Headlines

🌸 In the western and southern districts of Tamil Nadu, thunderstorm rains will be : Rainfall Center Announcement.

 🌸 The Union Health Ministry has recommended that 75 district hospitals be converted to medical colleges across the country to meet the shortage of doctors.

 🌸History in Delhi was registered in awning as 118.4 degrees

Rafael Nadal won the French Open tennis tournament in the men's singles competition for the 12th time,points were 6-3, 5-7, 6-1, 6-1.

 🌸 Yuvraj Singh, one of the Indian cricketers, retired from international cricket on Monday (June 10, 2019).



No comments:

Post a Comment