தமிழ்ப் பல்கலை.யில் ஒருங்கிணைந்த முதுகலை பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கை தொடக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 10, 2019

தமிழ்ப் பல்கலை.யில் ஒருங்கிணைந்த முதுகலை பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த முதுகலை பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.
இப்பல்கலைக்கழகத்தில் 2019 - 20 -ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழ் மற்றும் வரலாற்றுத் துறைகளில் ஒருங்கிணைந்த முதுகலை பட்டப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.


 இப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையைத் துணைவேந்தர் கோ. பாலசுப்ரமணியன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். பின்னர், அவர் தெரிவித்தது:


இந்த ஐந்தாண்டு கால ஒருங்கிணைந்த பட்டப்படிப்பில் 3 ஆண்டுகள் நிறைவு செய்தோர் விருப்பத்தின் அடிப்படையில் இளங்கலை பட்டம் பெறும் வசதி உள்ளது. இப்பட்டப்படிப்பில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேரலாம்.


மேலும், இரண்டாண்டு முதுகலைத் தமிழ், வரலாறு, தொல்லியல், நாடகம் ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது

மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 28 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் நேரடியாக இப்படிப்புகளில் சேர்ந்து கொள்ளலாம்.


 விண்ணப்பக் கட்டணம் பொது பிரிவினருக்கு ரூ. 300, பட்டியல் இனத்தவருக்கு ரூ. 150. மேலும், விவரங்களுக்கு www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment