இந்தியாவின் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 3 வயதில் இருந்தே கட்டாய கல்வி..: மத்திய அரசு புதிய திட்டம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 10, 2019

இந்தியாவின் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 3 வயதில் இருந்தே கட்டாய கல்வி..: மத்திய அரசு புதிய திட்டம்

இந்தியாவின் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 3 வயதில் இருந்தே கட்டாய கல்வி திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


 இந்த திட்டம் குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வரைவு அறிக்கையொன்றை தயார் செய்துள்ளது. இதன்படி கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 3 வயதில் இருந்தே கட்டாய கல்வி கற்றுக்கொடுக்கும் திட்டத்தை கொண்டுவர உள்ளனர்.


 தற்போதுள்ள முறைப்படி ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய கல்வி உரிமை சட்டம் அமலில் உள்ளது. இதில் மாற்றம் செய்து, 3 வயதில் சேர்க்கப்படும் மழலையர் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கட்டாய கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தப்படும்.


 அங்கன்வாடியில் 3 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள் தற்போது கவனிக்கப்படுகின்றனர். இனி 3 வயதில் இருந்து 8ம் வகுப்பு வரை இதன் மூலம் கவனிக்கப்படுவார்கள்.

இதற்காக ஆங்காங்கே உள்ள அங்கன்வாடிகள், உள்ளூர் தொடக்கப்பள்ளிகளோடு இணைக்கப்படும். அதாவது ஆரம்ப பள்ளிகளின் ஒரு அங்கமாக அங்கன்வாடி செயல்படும்.


தற்போது அங்கன்வாடிகளில் உள்ள கல்வி பயிலும் முறை முற்றிலுமாக மாற்றப்பட்டு விளையாட்டுடன் கூடிய கண்டுபிடிப்பு கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் 3 வயதில் இருந்தே கல்வி கற்கும் திறன் குழந்தைகளுக்கு அதிகரிக்கும்.


 இதற்காக அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு இனி சிறப்பு பயிற்சி அளித்து குழந்தைகளை வித்தியாசமான முறையில் கவனிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படவுள்ளது. மேலும் மும்மொழிக் கொள்கை திட்டமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.


 இதற்கு முன்பு அங்கன்வாடிகளை பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை நேரடியாக கவனித்து வந்தது. இப்போது மனிதவள மேம்பாட்டுத்துறை இணைந்து இதை கவனிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


 அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி காலை உணவும் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment