வானிலை மையங்களை மேம்படுத்த ரூ.1,500 கோடியில் நவீன கம்ப்யூட்டர்: மத்திய அரசு வாங்குகிறது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 9, 2019

வானிலை மையங்களை மேம்படுத்த ரூ.1,500 கோடியில் நவீன கம்ப்யூட்டர்: மத்திய அரசு வாங்குகிறது

இந்திய வானிலை மையத்தை மேம்படுத்த, தற்போது இருக்கும் கணினிகளை விட 8 மடங்கு கூடுதல் திறன் கொண்ட அதிநவீன கணினிகளை ரூ.1500 கோடி செலவில் கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


இந்திய வானிலை அறிவிப்பு மையங்கள், மத்திய புவி அறிவியல் அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றன. இந்த அமைச்சகத்துக்கு உட்பட்ட, புனேவில் அமைந்துள்ள இந்திய வெப்ப மண்டல வானிலை மையம், நொய்டாவில் உள்ள நடுத்தர தொலைவு வானிலை அறிவிப்பு தேசிய மையம் ஆகியவற்றில் தற்போது வினாடிக்கு 10 பீட்டா பிளாப்ஸ் வேகத்தில் செயல்படும் இரண்டு சூப்பர் கணினிகள் பயன்பாட்டில் உள்ளன.


 இந்நிலையில், வினாடிக்கு 80 பீட்டா பிளாப்ஸ் வேகத்தில் செயல்படும் இரண்டு அதிநவீன கணினிகளை வாங்குவதற்கு மத்திய புவி அறிவியல் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் ராஜீவன் கூறியதாவது:


40 பீட்டா பிளாப்ஸ் கொண்ட இரண்டு கணினிகளை வாங்குவதா அல்லது இரண்டு 60 பீட்டா பிளாப்ஸ் மற்றும் இரண்டு 20 பீட்டா பிளாப்ஸ் வேகத்தில் செயல்படும் கணினிகளை வாங்குவதா என்பது குறித்து நிபுணர்கள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.


இவற்றின் மதிப்பு ரூ.1,500 கோடியாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது செயற்கைக்கோள் மூலம் 12 கிமீ தூரம் வரையிலான வானிலையை மட்டுமே அறிய முடிகிறது.


இது ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பிராந்தியத்திற்கும் 5 கி.மீ. தூரம் என்ற அளவில் குறைக்கப்படும் பட்சத்தில் மிக துல்லியமான, தெளிவான வானிலை அறிக்கையை அளிக்க முடியும். அதற்கு அதிநவீன கணினிகள் தேவைப்படுகின்றன.


இந்த வகை கணினிகள் வானிலை அறிக்கையை மட்டுமல்லாமல் பருவநிலை மாற்றம், தட்பவெப்ப நிலை, பருவமழை காலத்தையும் துல்லியமாக கணிக்க கூடியவையாகும். இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment