ஆஸ்திரேலியாவை புரட்டி எடுத்த இந்திய அணி! உலக அரங்கில் முதல் அணி என்ற சாதனை படைத்தது! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 9, 2019

ஆஸ்திரேலியாவை புரட்டி எடுத்த இந்திய அணி! உலக அரங்கில் முதல் அணி என்ற சாதனை படைத்தது!

இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பையில் 14 வது லீக் போட்டியில்  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இரண்டு அணி தரப்பிலும் கடந்த போட்டியில் ஆடிய அதே அணியே களமிறங்கியுள்ளனர்.

 மேலும் இரண்டு அணிகளுமே முதலில் பேட்டிங் செய்வதையே விரும்புவதாக தெரிவித்தனர்.

அதிக ஸ்கோர் மேட்ச் ஆக, இருக்கும் என்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது.

 அதற்கேற்றார் போலவே இந்திய அணியின் பேட்டிங் இருந்தது. முதலில் நிதானம் காட்டிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், பிறகு அடித்து ஆட ஆரம்பித்தார்கள்.

ரோகித் சர்மா நிதானமாக ஆட, மறுமுனையில் ஷிகர் தவான் பவுண்டரிகளை அடித்து கொண்டிருந்தார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் 100 ரன்கள் என ஆட்டமிழக்காமல் கடந்தனர்.

 ஷிகர் தவான் முதலில் அரைசதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து ரோகித் சர்மா அரைசதம் அடித்தார். அணியின் எண்ணிக்கை 121 ஆக இருந்தபோது ரோஹித் சர்மா 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரை அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி ஒரு முனையில் நிதானமாக விளையாட, மறுமுனையில் ஷிகர் தவான் தொடர்ந்து அடித்து ஆடினார். ஷிகர் தவான் ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய 17 ஆவது சதத்தை பூர்த்தி செய்து 117 ரன்களில் ஆட்டமிழந்தார்.

 மறுமுனையில் ஆடிய கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்தார்

அதன் பிறகு வந்த ஹார்டிக் பாண்டியா, ஆஸ்திரேலிய பந்து வீச்சை வெளுத்து வாங்க 27 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவர் மட்டும் அரைசதம் அடித்து இருந்தால் உலக கோப்பை ஆட்டத்தில், ஒரு அணியின் முதல் 4 வீரர்களும் அரை சதம் அடித்த முதல் நிகழ்வாக அமைந்து இருக்கும். அந்த அரிய வாய்ப்பினை 2 ரன்களில் நழுவவிட்டார் பாண்டியா.

அதன் பிறகு வந்த முன்னாள் கேப்டன் தோனி யாரும் எதிர்பாராத வகையில் அதிரடியாக விளையாட 14 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதி நேரத்தில் வந்த ராகுல் 3 பந்துகளில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சருடன் 11 ரன்களை அடிக்க இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 352 ரன்களை குவித்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டோனிஸ் 2 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், கம்மின்ஸ், கோல்டர் நைல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.


இந்திய அணி கடைசி 10 ஓவர்களில் மட்டும் 116 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

 உலகக்கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக உலக அளவில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் இதுவாகும்.

இந்த இலக்கை ஆஸ்திரேலியா அடித்தால் அது உலகக்கோப்பை சாதனையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment