காணாமல் போன செல்போன்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை கண்டுபிடிக்க உதவும்
டிஜிகாப் வெர்ஷன் 2 என்ற செயலி தொடங்கி வைக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல்துறையின் டிஜிகாப் மொபைல் செயலியில் சிசிடிஎன்எஸ் என்ற புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் மற்றும் கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் ஆகியோர் இந்த செயலியின் புதிய சேவையை அறிமுகம் செய்து வைத்தனர்.
பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே காவல்துறையில் புகார் அளிக்க இந்த புதிய சேவை உதவுகிறது.
மேலும் ஏற்கனவே அளிக்கப்பட்ட புகாரின் தற்போதைய நிலை, பதிவு செய்யப்பட்ட வழக்கின் நிலை, வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தால், அதைப்பற்றிய தகவல் ஆகியவற்றை அறியமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் காவல்துறையில் கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், பொதுமக்களின் வீண் அலைச்சலை தவிர்க்கும் வகையில் இந்த செயலி பயன்படுகிறது என்று கூறினார்

No comments:
Post a Comment