இஎஸ்ஐ பங்களிப்பு தொகை 4 சதவீதமாக குறைப்பு.. மத்திய அரசு அதிரடி.. - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 14, 2019

இஎஸ்ஐ பங்களிப்பு தொகை 4 சதவீதமாக குறைப்பு.. மத்திய அரசு அதிரடி..

தொழிலாளர் காப்பீட்டு திட்டமான (ESI) மீதான பங்களிப்பு, தொகையை குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், தொழிலாளர்களும், முதலீட்டாளர்களும் பலனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய தொழிலாளர் நலத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தொழிலாளர் காப்பீட்டு திட்ட சட்டத்தின்படி, செலுத்த வேண்டிய 6.5 சதவீதம் என்ற மதிப்பிலான மொத்த தொகை, 4 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

இதன்படி, தொழில் உரிமையாளர் செலுத்த வேண்டிய தொகை 4.75 சதவீதத்திலிருந்து, 3.25 சதவீதமாக குறையும். தொழிலாளி செலுத்த வேண்டிய பங்குத் தொகை, 1.75%லிருந்து 0.75%மாக குறைந்துள்ளது.
பங்களிப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது, கணிசமான நன்மைகளை கொண்டுவரும். ESI திட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் இன்னும் கூடுதலாக பதிவு செய்யப்படும் வாய்ப்பு ஏற்படும். அத்தோடு, அமைப்பு சார் துறைக்குள் இன்னும் அதிகமான தொழிலாளர்களை கொண்டு வரும். இதேபோல், பங்களிப்பு தொகையை குறைத்துள்ளதன் காரணமாக, முதலாளிகள் பங்களிப்பு நிதி அளவு குறையும்.

இது, நிறுவனங்களின் மேம்படுத்தப்பட்ட நம்பகத்தன்மைக்கு வழிவகுக்கும். வர்த்தக எளிமைக்கு வழிவகுக்கும். இஎஸ்ஐ பங்களிப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால், சட்டத்திற்கு இணக்கமான சூழலுக்கு மேலும் பலர் வருவார்கள்.
ப்பீட்டு பலனாளி குடும்பங்களுக்கு, ஊழியர் 'அரசு காப்பீடு சட்டம் 1948 (ESI சட்டம்) மருத்துவம், மகப்பேறு, இயலாமை உதவி போன்றவற்றை கொடுக்கக் கூடியது. இஎஸ்ஐ சட்டம், ஊழியர் ஸ்டேட் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் (ESIC) மூலமாக நிர்வகிக்கப்படுகிறது. இ.எஸ்.ஐ. சட்டத்தின் கீழ் வழங்கப்படும் நன்மைகள், முதலாளிகள் மற்றும் ஊழியர்கள் வழங்கும், பங்களிப்புகளால் சாத்தியப்படுகிறது.

இஎஸ்ஐ சட்டத்தின் கீழ், முதலாளிகள் மற்றும் பணியாளர்கள் இருவருமே, தங்கள் பங்களிப்பு தொகையை வழங்குகிறார்கள். தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் மூலம் மத்திய அரசு, பங்களிப்பு விகிதத்தை முடிவு செய்யும்.

No comments:

Post a Comment