தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை சேர்ந்தவர் கணேசன். 73 வயதான இவர், சிறுவயதில் குடும்ப வறுமை காரணமாக 10 ம் வகுப்புடன் படிப்பினை நிறுத்திவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்ந்துள்ளர். பணி ஒய்வு பெற்ற பின்னர் 65 வயதில் இருந்து கடந்த 8 வருடங்களில் ஆங்கில பேச்சு பயிற்சி, கம்யூட்டர் கல்வியுடன் 12 ஆம் வகுப்பு முடித்து இளங்கலை பட்டத்துடன் 6 முதுகலை பட்டங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதுவரை 6 முதுகலை பட்டங்களை பெற்ற கணேசன், தற்போது 7 வது முதுகலை பட்டம் பெற தயாராகி வருவதாகவும், இன்னும் இரு வருடங்களில் 8 பட்டங்கள் பெற்று உலகசாதனை படைக்கப்போவதாகவும் தெரிவித்தார்.
தனது சாதனையோடு இவர் திருப்தி அடையவில்லை. ஓய்வு நேரங்களில் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக டியூசன் சொல்லிக் கொடுப்பதையும், அவர்களுக்கு கேரம் மற்றும் சதுரங்க விளையாட்டையும் கற்று தருகிறார். கல்லூரிகளுக்கு சென்று மாணவ, மாணவிகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து வகுப்பு எடுத்து வருகிறார்.
கல்விக்கு வயது ஒரு தடையல்ல என்பதை மீண்டும் ஒருமுறை நீரூபித்துள்ள கணேசன் தாத்தா..! ஒரு வாழ் நாள் சாதனையாளர் என்றால் அதுமிகை அல்ல.

No comments:
Post a Comment