மழை பெய்ய வேண்டி 4 லட்சம் பள்ளி மாணவர்கள் குறள் வாசித்து பிரார்த்தனை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 25, 2019

மழை பெய்ய வேண்டி 4 லட்சம் பள்ளி மாணவர்கள் குறள் வாசித்து பிரார்த்தனை

தமிழகம் முழுவதும் மிகக் கடுமையான வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.


 இதனால் எப்போதும் இல்லாத அளவில் இந்த ஆண்டு குடிநீர் பிரச்னை தலை தூக்கியிருக்கிறது. ஒருகுடம் தண்ணீருக்காக மக்கள் தவியாய் தவிக்கின்றனர். பல இடங்களில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடப்பது வாடிக்கையாக மாறிவிட்டது.


 இந்நிலையில், மழை வேண்டி அறநிலையத்துறை சார்பில் கோயில்களில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. கிராமப் பகுதிகளில் மழை வேண்டி சிறப்பு நூதன வழிபாடுகளில் மக்கள் ஈடுபடுகின்றனர்.


 இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2,541 அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் சுமார் 4 லட்சம் மாணவர்கள் மழை வேண்டி நேற்று சிறப்பு கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

வழக்கமாக நடைபெறும் காலை இறைவணக்க கூட்டத்தில், திருக்குறளில் உள்ள வான்சிறப்பு அதிகாரத்தில் மழையின் அவசியத்தை போற்றும் 10 குறள்களை மாணவர்கள் வாசித்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


ஒருசில பள்ளிகளில் திருவள்ளுவரை போல வேடமணிந்த மாணவர்கள், இறைவணக்க கூட்டத்தில் குறட்பாக்களை இசையுடன் வாசித்தனர். திருவண்ணாமலை அமராவதி முருகையன் நகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்து கொண்டார்.


 அப்போது, திருவள்ளுவரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். வான் சிறப்பு அதிகார திருக்குறள்களை வாசித்தனர். அதைெயாட்டி, பள்ளி மாணவிகள் அனைவருக்கும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.


தொடர்ந்து, ஒரு மாதம் தினமும் காலை இறைவணக்க கூட்டத்தில் வான் சிறப்பு அதிகார குறள்களை அனைத்து பள்ளிகளிலும் வாசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment