ஒரு மாதத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் சேவை கட்டணம்: வங்கி அதிரடி அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 25, 2019

ஒரு மாதத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் சேவை கட்டணம்: வங்கி அதிரடி அறிவிப்பு

ஒரு மாதத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்தால் சேவை கட்டணம் ரூ.50 முதல் ரூ.5 ஆயிரம் வரை வசூலிக்கப்படும் என்று கனரா வங்கி அறிவித்துள்ளது.பாஜக அரசு வந்த பிறகு வங்கியில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, வங்கியில் ஒரு நாளைக்கு ரூ.2 லட்சத்துக்கு மேல் பணம் செலுத்தினால் அந்த கணக்கு குறித்த விவரங்கள் உடனடியாக வருமான வரித்துறைக்கு சென்று விடும்.


மேலும் வங்கியில் குறிப்பிட்ட அளவு பணம் இல்லாவிட்டால் அபராதம் வசூலிப்பது கொண்டு வரப்பட்டது. தான் கணக்கு வைத்துள்ள வங்கியில் மாதம் 5 முறைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் அதற்கு மேல் சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

அதைத் தவிர, அடுத்த வங்கியில் 3 முறைக்கு மேல் எடுத்தால் சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில், ஒரு மாதத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தால், சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று வாடிக்கையாளர்களுக்கு கனரா வங்கி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது


. இது குறித்து கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஒரு மாதத்தில் முதல் மூன்று முறை மட்டுமே ரூ.50 ஆயிரத்துக்குள் டெபாசிட் இலவசம். 3 முறைக்கு மேல் செலுத்தும் ஒவ்வொரு தொகைக்கும் ரூ.50ம், மற்றும் ஜிஎஸ்டி, அதிகப்பட்சமாக ரூ.5 ஆயிரம் மற்றும் ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படும்.

ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் செலுத்தும் ஒவ்வொரு முறையும் ரூ.50ம், அதிக பட்சம் ரூ.5 ஆயிரம் மற்றும் ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படும். நமது வங்கிக் கணக்கில் சேமிப்பு கணக்கில் முதல் 5 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். 5 முறைக்கு மேல் எடுக்கும் ஒவ்வொரு தொகைக்கும் ரூ.100ம் மற்றும் ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படும்.



நமது வங்கிக் கிளையில் நடப்பு கணக்கில், மாதத்திற்கு ரூ.5 லட்சம் வரை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். ரூ.5 லட்சத்துக்கு மேல் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய், அதிக பட்சம் ரூ.10 ஆயிரம் மற்றும் ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படும்.

இவ்வாறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தற்போது கனரா வங்கி மட்டும் இந்த அறிவிப்புகளை செய்துள்ளது. இனி அடுத்தடுத்து மற்ற வங்கிகளும் அறிவிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment