தமிழக அரசின் சில திட்டங்களில் கீழ் விண்ணப்பிப்பவர்களின் ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ. 72,000 ஆக உயர்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 1, 2019

தமிழக அரசின் சில திட்டங்களில் கீழ் விண்ணப்பிப்பவர்களின் ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ. 72,000 ஆக உயர்வு

தமிழக அரசால் செயல்படுத்தப்படும் சில திட்டங்களில் கீழ் விண்ணப்பிப்பவர்களின் ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ 24 ஆயிரத்தில் இருந்து ரூ 72 ஆயிரமாக உயர்த்தி முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


 திருமண நிதியுதவி திட்டங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த குடும்ப ஆண்டு வருமானத்தின் உச்ச வரம்பை ரூ.24.000ல் இருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தி மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு ஏற்கனவே உத்தரவிட்டது.


 இதனால் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் கூடுதலாக பயனாளிகள் பயன் அடைந்து வந்தார்கள்.

இந்நிலையில் திருமண நிதியுதவி திட்டங்களை போலவே  சமூக நலத்துறையின் கீழ் ஏழை விதவைகளின் குழந்தைகளுக்கு இலவச பாடநூல், குறிப்பேடுகள் வழங்கும் திட்டத்திற்கான ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ 72 ஆயிரமாக உயர்த்தி முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


அதே போல தொழில் கூட்டுறவு சங்கங்களில் அங்கத்தினர் அனுமதி, தையல் பயிற்சிகளில் சேர்க்கை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் சேவை இல்லங்களுக்கும் வருமான உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


 தொழிற்பயிற்சி நிலையங்களில் அனுமதி மற்றும் மூன்றாம் பாலினர் நலத்திட்ட உதவிகளுக்கும் வருமான உச்ச வரம்பு ரூ 72 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


 இதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதலாக பயனாளிகள் பயன் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment