கல்வித்துறையில் 7 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு: தமிழக அரசு அரசாணை வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, June 12, 2019

கல்வித்துறையில் 7 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

மாவட்ட கல்வி அலுவலர் நிலையில் உள்ள 7 கல்வி அதிகாரிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் (CEO) பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் 1.6.2019ம் தேதி வரை காலியாக உள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிடங்கள் மற்றும் அதை ஒத்த பணியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதன்பேரில்  மாவட்ட கல்வி அலுவலர்கள் நிலையில் தகுதியுடைய 7 பேருக்கு தற்காலிக பதவி உயர்வு அளித்து அரசு உத்தரவிடுகிறது.

இதன்படி சீர்காழி மாவட்டக் கல்வி அலுவலர் தியாகராஜன்-திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் குணசேகரன்- நாகப்பட்டினம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், வத்தலகுண்டு மாவட்ட கல்வி அலுவலர் முத்துக்கிருஷ்ணன்-கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், தேனி மாவட்டக் கல்வி அலுவலர் கணேஷ்-திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், சென்னை (மேற்கு) மாவட்ட கல்வி அலுவலர் ஆறுமுகம்- கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர, உளுந்தூர்பேட்டை மாவட்ட கல்வி அலுவலர் ரத்தினச்செல்வி -தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தின் நிர்வாக அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அரூர் மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணி-சென்னையில் உள்ள தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் துணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment