மூன்று பிள்ளைகளுக்கும் பார்வையில்லை.. கல்விக் கண் திறக்க போராடும் தாய் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 1, 2019

மூன்று பிள்ளைகளுக்கும் பார்வையில்லை.. கல்விக் கண் திறக்க போராடும் தாய்

பெரம்பலூர் அருகே பிறவியிலேயே பார்வையற்ற மூன்று பிள்ளைகளுக்கு கல்விக்கட்டணம் கட்ட முடியாமல் ஏழைத்தாய் ஒருவர் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்.

பெரம்பலூர் மாவட்டம் நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகுமாரி. இவருக்கு சந்துரு, சந்தியா, சஞ்சய் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.


 அவர்கள் மூவருமே பிறவியிலேயே பார்வையற்றவர்களாக பிறந்துள்ளனர். ஆனால் தாய் ராஜகுமாரி மனம் தளராமல் தனது மூன்று குழந்தைகளையும் வைராக்கியமாக வளர்த்து வந்‌துள்ளார்.


இந்தச் சூழலில் ராஜகுமாரியின் கணவர் உயிரிழந்ததால் குடும்பமே மீள முடியாத சோகத்தில் ஆழ்ந்தது.

இந்நிலையில் தான் இருக்கும் வரை தன் குழந்தைகளை கலங்க விடமாட்டேன் என்று வைராக்கியமாக தனது குழந்தைகளை நல்ல முறையில் அவர் படிக்க வைத்து வருகிறார்.

படிப்பில் கெட்டிக்காரர்களாக இருக்கும் இந்தப் பிள்ளைகளுக்கு குடும்பத்தின் பொருளாதாரம் தற்போது தடையாக உள்ளது.

மிகச்சிறிய அளவிலான வருமானத்தை கொண்‌டு வாழ்க்கையை‌ நடத்தும் ராஜகுமா‌ரி, கருணை உள்ளம் கொண்டவர்கள் தங்களுக்கு உதவ வேண்டும் என்று ‌எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்.

திருச்சி தனியார் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு பயிலும் மூத்த மகன் சந்துரு, பனிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரிக்கு செல்ல காத்திருக்கும் மகள் சந்தியா, பள்ளிப் படிப்பில் இருக்கும் இளைய மகன் சஞ்சய் என மூன்று பிள்ளைகளையும் படிக்க வைக்க எந்தவித உதவியும் இன்றி சிரமப்பட்டு வரும் ராஜகுமாரி, கல்வி மூலம் வாழ்வில் வெளிச்சம் பெற பிள்ளைகளுக்கு யாராவது உதவமாட்டார்களா என்ற ஏக்கத்துடன் காத்திருக்கிறார்

No comments:

Post a Comment