மெட்ரோ ரெயிலில் மாணவர்கள் இலவச பயணம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 7, 2019

மெட்ரோ ரெயிலில் மாணவர்கள் இலவச பயணம்

சென்னை மெட்ரோ ரெயிலில் மாணவ-மாணவிகள் இலவசமாக கல்வி பயணம் மேற்கொண்டனர்.
சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் பள்ளி மாணவர்களுக்கு மெட்ரோ ரெயில் பயணத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், மெட்ரோ ரெயில் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த மெட்ரோ ரெயிலில் இலவச கல்வி பயணம் ஏற்பாடு செய்து வருகிறது.

இந்த  கல்வி பயணத்தில் மெட்ரோ ரெயிலின் சிறப்பு அம்சங்கள், மெட்ரோ ரெயில் நிலையங்கள் குறித்தும் தெரிவிக்கப்படும்.

கடந்த 2018-19-ம் ஆண்டில் இந்த கல்வி பயணம் மூலம் 60 பள்ளிகளை சேர்ந்த 31 ஆயிரத்து 178 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.

இதைப்போல் ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் முதல் சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையம் வரை, வேளச்சேரியில் உள்ள சென்னை உயர் நிலைப்பள்ளியின் 300 மாணவ-மாணவிகள் இலவசமாக கல்வி பயணம் மேற்கொண்டனர்.

No comments:

Post a Comment