செயற்கை சூரியனை ஒளிர வைக்கும் பணியில் சீன விஞ்ஞானிகள்..! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 11, 2019

செயற்கை சூரியனை ஒளிர வைக்கும் பணியில் சீன விஞ்ஞானிகள்..!

செயற்கை சூரியனை ஒளிர வைக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 1999ஆம் அண்டு முதல் செயற்கை சூரியன் என்று அழைக்கப்படும் Experimental Advanced Superconducting Tokamak என்ற இயந்திரத்தை உருவாக்கும் பணியில் சீனா ஈடுபட்டு வருகிறது. அணுக்கரு இணைவு மூலம் சூரிய சக்தி உருவாவது போல, இந்த இயந்திரத்தில் செயற்கையாக சூரிய சக்தியை உருவாக்க முடியும்.

இதற்கான மீக்கடத்தி பொருட்களை அமெரிக்கா தருவதாக கூறி பின்னர் பின்வாங்கியது. இதனையடுத்து சீன விஞ்ஞானிகளே சில ஆண்டுகால முயற்சிக்கு பின் தரம் வாய்ந்த மீக்கடத்தி பொருட்களை உருவாக்கி உள்ளனர். இவை அந்த இயந்திரத்தில் பொருத்தப்பட உள்ளன.

இந்த இயந்திரம் 2025ஆம் ஆண்டுக்குள் முழுமையாக தயாராகிவிடும் என்றும் 2050ஆம் ஆண்டு முதல் தொழில்முறையில் இதன் மூலமான சக்தி பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment