வீட்டிலிருந்தே பணிகளை செய்யும்படி ஐடி நிறுவனங்கள் அறிவுறுத்தல் காரணம் என்ன? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 14, 2019

வீட்டிலிருந்தே பணிகளை செய்யும்படி ஐடி நிறுவனங்கள் அறிவுறுத்தல் காரணம் என்ன?

சுமார் 600 ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள ஓ.எம்.ஆர் பகுதியில், ஒரு நாளைக்கு சுமார் 3 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் பெரும்பாலான தண்ணீர் வெளியிலிருந்துதான் கொண்டு வரப்படுகிறது. இவற்றில் 60 சதவிகித தண்ணீர் ஐடி நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

குறிப்பாக, சிப்காட் ஐடி பகுதியில் உள்ள 46 ஐடி நிறுவனங்களுக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தினமும் தேவைப்படுகிறது. இதற்கு அங்குள்ள 17 கிணறுகளிலிருந்து தண்ணீர் தரப்பட்டுவந்தது. ஆனால் தற்போது அங்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே தினமும் தரப்பட்டுவருகிறது.

இந்நிலையில், தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் தண்ணீர் தேவையை சமாளிக்க முடியாமல் பல நிறுவனங்கள் திணறிவருகின்றன. தங்களது தேவைக்கான குடிநீரை வீட்டிலிருந்தே எடுத்துவருமாறும், அலுவலகங்களில் தண்ணீரை குறைவாகவே பயன்படுத்துமாறும் ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். ஒரு சில நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிகளை செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளன.

No comments:

Post a Comment