ஓட்டுநர் உரிம முகவரி மாற்றத்துக்கு தடையில்லா சான்று தேவையில்லை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 8, 2019

ஓட்டுநர் உரிம முகவரி மாற்றத்துக்கு தடையில்லா சான்று தேவையில்லை

ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் செய்ய தடையில்லா சான்று தேவையில்லை என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது
ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் செய்வதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருந்து வந்தன. ஒரு இடத்தில் ஓட்டுநர் உரிமம் பெற்ற நபர், மற்றொரு இடத்தில் நிரந்தரமாக தங்க நேரும் பட்சத்தில் ஓட்டுநர் உரிமத்தின் முகவரியில் மாற்றம் செய்ய வேண்டும்.
அதற்கு, உரிமம் பெற்ற அந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அவர் தடையில்லா சான்று (என்.ஓ.சி) பெற வேண்டும். அவர் மாறிச் செல்லும் பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், அந்தச் சான்றை அளித்து ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம்.

ஆனால், தற்போது அனைத்து போக்குவரத்து அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து தடையில்லா சான்று அளிக்க அவசியமில்லை என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை உயர் அதிகாரி கூறியதாவது: போக்குவரத்து அலுவலகங்கள் கணினி மயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, உரிமம் பெற்ற அனைவரது தகவல்களும் "சாரதி' என்ற மென்பொருளில் சேமிக்கப்பட்டு வருகின்றன.
இதனால் எங்கிருந்து வேண்டுமானாலும் யாருடைய குற்றப் பின்னணியையும் அதிகாரிகளால் கண்டறிய முடிவதால், தடையில்லா சான்று தற்போது அவசியமில்லை. இதனால் வெளியூர்களில் நிரந்தரமாக குடியேறுபவர்கள் எளிதாக முகவரி மாற்றம் செய்யலாம் என்றார்.

No comments:

Post a Comment