ஒரு லட்சம் மரக்கன்று பள்ளிகளில் நட திட்டம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 8, 2019

ஒரு லட்சம் மரக்கன்று பள்ளிகளில் நட திட்டம்

நடப்பு கல்வியாண்டில், பள்ளிகளில் ஒரு லட்சம் மரக்கன்று நட, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.


'மகிழம்' என்கிற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, அரசு பள்ளிகளில் பசுமை வளாகம் அமைக்க கல்வித்துறை திட்டமிட்டது. பள்ளி திறக்கப்பட்டதும் மரக்கன்றுகள், இயற்கை உரம், கூண்டு ஆகியவை வழங்கப்பட்டன.


நடப்பாண்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட, 300 பள்ளிகளில், ஒரு லட்சம் மரக்கன்று நடப்பட உள்ளது. முதன்மை கல்வி அலுவலர் முருகன் தலைமையில், ஒண்டிப்புதுார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இத்திட்டம் துவக்கப்பட்டது.


 ஆக., மாத்துக்குள், 300 பள்ளிகளிலும் மரக்கன்று நடப்படும்.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பள்ளிகளில் நடப்படும் மரக்கன்றுக்கு, மாணவர்கள் பெயர் சூட்டப்படும்.

முறையாக பராமரித்து வளர்ப்போரை ஊக்குவிக்கவும், இயற்கை வேளாண்மை, பள்ளிகளில் தோட்டம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தவும் திட்டமிட்டுள்ளோம். பள்ளிகள் பசுமையாவதோடு, மாணவர்களுக்கு இயற்கை சார்ந்த புரிதல் மேம்படும்' என்றனர்.

No comments:

Post a Comment