விமானமாக மாறியது வகுப்பறை : கவர்ந்து ஈர்க்கிறது அரசு பள்ளி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 7, 2019

விமானமாக மாறியது வகுப்பறை : கவர்ந்து ஈர்க்கிறது அரசு பள்ளி

மாணவர்களையும், பெற்றோர்களையும் கவருவதற்காக, மேட்டுப்பாளையத்தில் அரசு பள்ளி நிர்வாகம் வகுப்பறை சுவற்றை விமானமாக மாற்றி அமைத்துள்ளது


.மேட்டுப்பாளையம் நடூரில், அன்னுார் ரோடு நகராட்சி துவக்கப்பள்ளி உள்ளது. பாதி வகுப்பறைகள் ஓட்டுக் கட்டடத்திலும், ஸ்மார்ட் வகுப்பறைகள் கான்கிரீட் கட்டடத்திலும் உள்ளன.


 இப்பள்ளியில், 165 குழந்தைகள் படிக்கின்றனர்.
ஆசிரியர்கள் நன்கு பாடம் சொல்லிக் கொடுப்பதால், இப்பள்ளியில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை விரும்பி சேர்க்கின்றனர்.


 இங்கு ஆங்கிலம், தமிழ் வழியில் கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது.பள்ளி ஆசிரியர்கள் ஓட்டுக் கட்டட சுவற்றில் விமானத்தின் படத்தை வரைந்துள்ளனர்.


 வகுப்பறை உள் சுவர்களில் சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக, பாடம் சம்பந்தமான படங்கள், தமிழ், ஆங்கில எழுத்துக்கள் ஆகியவை பெயின்டால் வரைந்துள்ளனர்.


இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை பேபி எஸ்தர் கூறியதாவது:

 இப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பொறுப்பேற்ற போது, குழந்தைகளின் எண்ணிக்கை, 42 ஆக இருந்தது. நகராட்சி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் மக்கள் பங்களிப்புடன், பள்ளி வகுப்பறைகளை மாற்றி அமைக்கப்பட்டது.


 இரண்டு ஸ்மார்ட் வகுப்பறைகள் புதிதாக அமைத்து, கம்ப் யூட்டர் மூலம் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வருகிறோம். கடந்தாண்டு குழந்தைகளின் எண்ணிக்கை, 165 ஆக உயர்ந்தது. இந்தாண்டு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை புதிதாக, 52 பேர் சேர்ந்துள்ளனர்


.வகுப்பறையின் வெளிச்சுவர் வெள்ளை நிறத்தில் பார்த்த பழகிப்போன குழந்தைகளுக்கு, சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதற்காக கட்டடத்தின் சுவற்றில் விமானத்தின் கதவு வழியாக வகுப்பறைக்குள் செல்லும் வகையில் படம் வரையப்பட்டுள்ளது.

 இதை பார்க்கும் குழந்தைகள் நாங்கள் 'ஏரோபிளான்' பள்ளியில் படிக்கிறோம் என பெற்றோரிடம் கூறி மகிழ்ச்சி அடைகின்றனர்.

No comments:

Post a Comment