சொந்தக் காரை வாடகைக்குபயன்படுத்தினால் பதிவு ரத்து - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 7, 2019

சொந்தக் காரை வாடகைக்குபயன்படுத்தினால் பதிவு ரத்து

பழநியில் சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவது தெரியவந்தால் அந்த வாகனப்பதிவு ரத்து செய்யப்படும்' என போக்குவரத்துத் துறை, போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர்.பழநி அருகே ஆயக்குடியில் வாடகை வாகன டிரைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.


 பழநி வாகன ஆய்வாளர் செல்வி, இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். இதில் சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்


. வாடகை கார் டிரைவர்கள் அம்மாதிரியான வாகனங்களை கண்டறிந்தால் சம்பந்தப்பட்ட போலீசார், வாகன ஆய்வாளர் அலுவலக அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம்.மாறாக நீங்களே வாகனங்களை சிறைப்பிடிக்க கூடாது.

இதுவரை ஒரு மாதத்தில் 10 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து ரூ.ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி வாடகைக்கு பயன்படுத்தும் டிரைவரின் 'லைசென்ஸ்' ரத்துசெய்யப்படும்.


மேலும் அவ் வாகனங்களின் பதிவை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

No comments:

Post a Comment