இரண்டரை வயதில் திருக்குறள், ஆத்திச்சூடி உள்ளிட்டவற்றை சரளமாகக் கூறி அசத்தும் சிறுவன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 17, 2019

இரண்டரை வயதில் திருக்குறள், ஆத்திச்சூடி உள்ளிட்டவற்றை சரளமாகக் கூறி அசத்தும் சிறுவன்

சென்னையை அடுத்த பல்லாவரத்தில், இரண்டரை வயது சிறுவன், திருக்குறள், ஆத்திச்சூடி ஆகியவற்றை மனப்பாடமாகக் கூறி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் பட்டியலில் இடம்பிடித்து  சாதனை படைத்துள்ளான்.

பல்லாவரத்தை அடுத்த நெமிலிச்சேரி பகுதியை சேர்ந்த வினோத் - பிரியா தம்பதியினரின் இரண்டரை வயது குழந்தை ரேவந்த் தான் இந்த சாதனையை படைத்துள்ளார்.

பல்வேறு நாடுகளின் கொடிகள், தலைவர்களின் பெயர்கள், பக்திப் பாடல்கள், விலங்குகள், விளையாட்டுகள், வண்ணங்கள் உள்ளிட்டவற்றை சரளமாக கூறி சாதனை படைத்துள்ளார்.

இதற்காக இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்சின் இளம்சாதனையாளர் பட்டியலில் இடம் பிடித்ததோடு, அதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கமும் சிறுவன் ரேவந்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த சிறு வயதில் சாதனை படைத்த ரேவந்த்துக்கு, பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

No comments:

Post a Comment