திருமணமான கையோடு தலைகவசம் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய ஜோடி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 13, 2019

திருமணமான கையோடு தலைகவசம் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய ஜோடி

சேலம் மாவட்டத்தில், இருசக்கர வாகனத்தில் செல்வோர் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து செல்லும்படி திருமணம் செய்த கையோடு புதுமண தம்பதியினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தமிழகம் முழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து செல்லும்படி காவல் துறையினர், வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், சேலத்தை சேர்ந்த புதுமண தம்பதி கீர்த்தி ராஜ் மற்றும் தனசிரியா ஆகியோர், தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக, திருமணம் முடிந்த கையோடு, நெத்திமேட்டிலுள்ள திருமண மண்டபத்திலிருந்து சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள வீடு நோக்கி இருவரும் தலைக்கவசம் அணிந்தபடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

புதுமண தம்பதியின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

No comments:

Post a Comment