இந்த இடத்தில் 3 மணி நேரத்திற்கு மேல் இருந்தால் அபராதமாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 13, 2019

இந்த இடத்தில் 3 மணி நேரத்திற்கு மேல் இருந்தால் அபராதமாம்

தாஜ் மகாலுக்குள் 3 மணி நேரத்துக்கு மேல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றான தாஜ்மகாலில் சமீபத்தில் டெர்ன்ஸ்டைல்(turnstile) கேட்டுகள் பொறுத்தப்பட்டன.

இதனால், சுற்றுலா பயணிகளின் வருகை நேரமும், வெளியே செல்லும் நேரமும் பதிவாகும். இந்நிலையில், தாஜ் மகாலுக்குள் 3 மணி நேரத்துக்கு மேல் சுற்றுலா பயணிகள் இருந்தால், டிக்கெட் விலையே அபராதமாக விதிக்கப்படும் என்று இந்திய தொல்லியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

மேலும் நுழைவு சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் நுழைவு நேரத்துக்கு பதிலாக சுற்றுலா பயணிகள் தாமதமாக வந்தால் அனுமதி மறுக்கப்படும் என்றும், புதிய நுழைவு சீட்டு வாங்கிய பிறகு தான் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment