காமராஜர் பல்கலைக்கழகம் ரூ.1000 கோடி நிதிக்கு தகுதிபெற்றுள்ளதாக துணைவேந்தர் தகவல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 13, 2019

காமராஜர் பல்கலைக்கழகம் ரூ.1000 கோடி நிதிக்கு தகுதிபெற்றுள்ளதாக துணைவேந்தர் தகவல்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், வர்ஷா என்ற திருநங்கைக்கு முதுநிலை படிப்பில் சேர வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, மாணவர் எண்ணிக்கை 800 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

மத்திய NIRI தர வரிசையில், பல்கலைக்கழகம் 54வது இடத்திலிருந்து 45 வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக குறிப்பிட்ட அவர், இதன் மூலம் மத்திய அரசு வழங்கக்கூடிய 1000 கோடி ரூபாய் நிதிக்கு பல்கலைக்கழகம் தகுதிபெற்றுள்ளதாக தெரிவித்தார்

பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக வர்ஷா என்ற திருநங்கைக்கு முதுநிலை நாட்டுப்புறவியல் படிப்பில் சேர அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment