அமெரிக்கா மூன்றாம் இடம்: இந்தியா இரண்டாம் இடம்: எந்த விஷயத்தில் தெரியுமா? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 15, 2019

அமெரிக்கா மூன்றாம் இடம்: இந்தியா இரண்டாம் இடம்: எந்த விஷயத்தில் தெரியுமா?

உலகளவில் இணையப்பயன்பாட்டில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளதாக மேரி மீகர் ஆய்வு தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் இணையத்தின் ட்ரெண்ட் குறித்து மேரி மீகர் ஆய்வறிக்கை வெளியிடப்படுகிறது. அதன்படி உலகளவில் 2018-ம் ஆண்டு 380 கோடி இணையப் பயனாளர்கள் உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 51 சதவீதம் என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே பயன்பாடு உலகளவில் 2017-ம் ஆண்டு 49 சதவீதமாக இருந்தது. பேஸ்புக், யூடியூப், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளவில் 21 சதவீத இணையப் பயனாளர்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளதாக மேரி மீகர் ஆய்வு கூறியுள்ளது. 12 சதவீத இணையப் பயனாளர்களுடன் இந்தியா இரண்டாம் இடத்திலும், 8 சதவீத இணையப் பயனாளர்களுடன் அமெரிக்கா மூன்றாம் இடத்திலும் இருப்பதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment