வாஸ்லின் பயன்படுத்துவோருக்கு இந்த ரகசியம் தெரியுமா ? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 11, 2019

வாஸ்லின் பயன்படுத்துவோருக்கு இந்த ரகசியம் தெரியுமா ?

வாஸ்லின் வறண்ட சருமம், வறண்ட உதடுக்காக ஈரப்பதத்தைத் தக்க வைக்கப் பயன்படுத்தப்படும் ஜெல் என்பது அனைவரும் அறிந்ததே. வாஸ்லினை பயன்படுத்தி இன்னும் பல சரும பாதுகாப்பை செய்யலாம் என்பது தெரியுமா?


1.பளபளக்கும் உதடு : அதிக விலை கொடுத்து வாங்கிய லிப்ஸ்டிக் நீங்கள் எதிர்பார்த்த தோற்றத்தை அளிக்கவில்லை எனில் அதைத் தூக்கிப் போடவும் முடியாது. கவலையே வேண்டாம். அதோடு இந்த வாஸ்லின் ஜெல்லைக் கலந்து அப்ளை செய்து பாருங்கள். கிளாஸி தோற்றத்தில் உதடுகள் பளபளக்கும்.

2.காயங்களுக்கு மருந்து : சிறு காயம், கீறல் ஏற்பட்டிருந்தால் அந்த இடத்தில் வாஸ்லினைத் தடவி வர விரைவில் ஆறும். மென்மையான சருமம் கிடைக்கும்.

3.மேக்அப்பை களைக்கலாம் : காஸ்மெடிக்ஸ் பொருட்கள் வாங்க அதிகமாக செலவு செய்கிறீர்கள் என்று நினைத்தால் மிச்சப்படுத்த இது ஒரு சிறந்த ஐடியா. அப்ளை செய்த மேக்அப்பைக் களைக்க தனியாக மேக்அப் ரிமூவர் வாங்குவதைக் காட்டிலும் வாஸ்லின் பயன்படுத்தலாம். காட்டனில் வாஸ்லின் தடவி மசாஜ் செய்வது போல் மேக் அப்பை களைக்கலாம்.

4.கண் இமைகள் வளரும் : வாஸ்லின் பயன்படுத்தினால் கண் இமைகள் வளருமா.. என்றால் அது பொய்தான். வளரும் என்பதை விட மென்மையாகும், ஈரப்பதமாகும். கண் இமைகள் அரிப்பு இருக்காது.

5.வெடிப்பான கூந்தல் முனைகள் : முடியின் முனைகள் வெடிப்பு வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும். இதை போக்க வாஸ்லின் தடவினால் வெடிப்புகளைக் குறைக்கலாம்.

6.புருவ வறட்சி : புருவங்கள் எளிதில் வறட்சி அடையும். அதற்கு வாஸ்லின் தடவலாம். இது புருவத்தை ஹைலைட் செய்து காட்டவும் உதவும்.

No comments:

Post a Comment