குறைந்தபட்ச கல்வித்தகுதி இல்லாத பேராசிரியர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய அனைத்துப் பல்கலைக்கழகங்கள் உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, June 12, 2019

குறைந்தபட்ச கல்வித்தகுதி இல்லாத பேராசிரியர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய அனைத்துப் பல்கலைக்கழகங்கள் உத்தரவு

யு.ஜி.சி விதிப்படி குறைந்தபட்ச கல்வித்தகுதி இல்லாத தற்காலிக ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவிக்க அனைத்து பல்கலைக்கழகங்கள் தங்களது உறுப்பு கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளன


. கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில், ஆசிரியர் நியமனத்திற்கான விதிமுறைகளை பல்கலைக்கழக மானியக்குழு(யு.ஜி.சி.) வெளியிட்டது. அதன்படி, ஒரு கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்ற முதுநிலை பட்டப்படிப்பில் 55 சதவீதம் தேர்ச்சியுடன், தேசிய தகுதி தேர்வு (நெட்) அல்லது மாநில தகுதி தேர்வு (செட்) ஆகிய ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அதேபோல், பல்கலைக்கழக மானியக்குழு விதி 2009ன்படி ஆராய்ச்சி படிப்பு முடித்திருந்தாலும் உதவி பேராசிரியர்களாக இருக்கலாம்


. இந்த நிலையில், நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றின்படி யு.ஜி.சி., நிர்ணயித்துள்ள செட்/நெட் அல்லது பிஎச்.டி., தகுதி இல்லாதவர்களை பணியில் இருந்து நவிடுவிக்கும் நடவடிக்கையில் பல்கலைக்கழகங்கள் இறங்கியுள்ளன.

அந்த வகையில், சென்னை பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை, நெல்லை ம.சுந்தரனார் பல்கலை, பாரதியார் பல்கலை, பாரதிதாசன் பல்கலை, அன்னை தெரசா பல்கலை, பெரியார் பல்கலை, திருவள்ளுவர் பல்கலை ஆகியவை தங்களது கல்லூரிகளுக்கு இதுகுறித்த சுற்றிக்கையை அனுப்பியுள்ளன.


 அதில், யு.ஜி.சி., விதிமுறைப்படி தகுதியற்ற பேராசிரியர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நுாற்றுக்கணக்கான கல்லுாரிகள் உள்ளன.


 இவற்றில் 60 சதவீதம் வரை சுயநிதி கல்லுாரிகள். இங்கு, செட்/நெட் அல்லது பிஎச்.டி., முடிக்காத 10,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக பணியில் உள்ளனர்.


 இந்நிலையில் பல்கலைக்கழகங்களின் இத்தகைய நடவடிக்கையால், திருவள்ளுவர் பல்கலையில் மட்டும் சுமார் 500 பேராசியர்கள் பாதிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், மற்ற பல்கலைக்கழங்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான பேராசிரியர்களுக்கும் பாதிப்புக்குள்ளாவர் என கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment