ஆபீஸ் ஏசி மெஷினைக் கழற்றி அரசு ஆஸ்பத்திரியில் மாட்டிய கலெக்டர்.. - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 7, 2019

ஆபீஸ் ஏசி மெஷினைக் கழற்றி அரசு ஆஸ்பத்திரியில் மாட்டிய கலெக்டர்..

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு கலெக்டர் செய்த செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் உமரியா மாவட்டத்தில் கலெக்டராக இருப்பவர் ஸ்வரோசிஷ் சோமவன்ஷி. இந்தூர் நகரில் ஒரு அரசு ஊட்டச்சத்து மைய மருத்துவமனையில் கடும் வெப்பத்தால் நோயாளிகள் புழுங்கித் தவிப்பதைப் பார்த்து வேதனை அடைந்தார் ஸ்வரோசிஷ் சோமவன்ஷி.

என்ன செய்யலாம் என்று யோசித்த அவர் அதிரடியாக ஒரு நடவடிக்கையில் இறங்கினார். தனது அலுவலகத்தில் இருந்த ஏசி மெஷின், அலுவலக வளாகத்தில் இருந்த மேலும் சில ஏசி மெஷின்களைக் கழற்ற உத்தரவிட்டார் . பின்னர் அவற்றைக் கொண்டு போய் அந்த மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் வசதிக்காக பொருத்த உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment