காய்கறிகளிடமிருந்தும் சூப்பர் பக்ஸ் பாக்டீரியா பரவும் - அமெரிக்க ஆய்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 24, 2019

காய்கறிகளிடமிருந்தும் சூப்பர் பக்ஸ் பாக்டீரியா பரவும் - அமெரிக்க ஆய்வு

காய்கறிகளிடமிருந்தும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் பாக்டீரியா மனிதர்களுக்குப் பரவக் கூடும் என அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

பொதுவாக சூப்பர் பக்ஸ் என்ற பாக்டீரியா மாமிசம் உண்ணும் நபர்களைத்தான் தாக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்து அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் ஆய்வு மேற்கொண்டது.

அதன்படி, அந்நாட்டில் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் சூப்பர் பக்ஸ் பாக்டீரியாவால் தாக்கப்படுகின்றனர். அதில் 20 சதவீதம் பேருக்கு காய்கறி, தாவரங்களில் இருந்தும் பரவியதாக அந்த ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஈ கோலி எனும் கெட்ட பாக்டீரியா தொற்றிய கீரைத் தாவரத்தை எலிக்கு கொடுத்து பரிசோதித்தனர். அப்போது வெகு நாட்கள் பயன்பாட்டுக்குப் பின் அதன் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதித்து, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

தரமற்ற, கலப்படமான காய்கறிகளை உண்ணும் மனிதர்களுக்கும் சூப்பர் பக்ஸ் பாக்டீரியா பரவும் என கூறியுள்ளனர்

No comments:

Post a Comment