இளநிலை மருத்துவப்படிப்பான எம்.பி.பி.எஸ் முடித்தவர்களுக்கு புதிய தகுதித்தேர்வை கொண்டு வருவதற்கான மசோதா நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ளது.
தற்போது எம்பிபிஎஸ் படிக்க நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல், எம்.பி.பி.எஸ் முடித்தவர்கள் National Exit Test எனப்படும் நெக்ஸ்ட் தகுதித் தேர்வை கட்டாயமாக்கிட மத்திய அரசு முடிவு செய்தது.
கடந்தாண்டிலேயே இந்த தேர்வை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கைவிடப்பட்டது.
இந்நிலையில், நெக்ஸ்ட் தேர்வை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்கான மசோதா தற்போதைய நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்பட உள்ளது.
இந்தியாவில் இளநிலை மருத்தவப்பட்ட படிப்பு ஐந்தரை ஆண்டுகள் கொண்டது. கல்லூரியில் நான்கரை ஆண்டுகள் படித்த பிறகு ஓராண்டு கால பயிற்சி மருத்துவராக பணியாற்றுகின்றனர்.
இதனையடுத்து, மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து மருத்துவராக பணியாற்றுவது தற்போதைய நடைமுறை ஆகும்.
இதுவே வெளிநாட்டில் இருந்து மருத்துவம் படித்துவிட்டு இந்தியா வருபவர்களுக்கு எக்ஸிட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதில் தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.
எனவே, நெக்ஸ்ட் தேர்வு நடைமுறைக்கு வந்தால் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய முடியும் என்ற நிலை உருவாகும்

No comments:
Post a Comment