தனியார் பள்ளிக்கு போட்டியாக அரசுப்பள்ளி - தனி ஒரு ஆசிரியரின் அசத்தல்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 2, 2019

தனியார் பள்ளிக்கு போட்டியாக அரசுப்பள்ளி - தனி ஒரு ஆசிரியரின் அசத்தல்!

ஒரு காலத்தில் தனியார் பள்ளியை நோக்கி ஓடிய மக்கள், இன்று மீண்டும் அரசுப் பள்ளிகளை நோக்கி படையெடுக்கின்றனர்.


 அந்தளவிற்கு அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்து வருகிறது. அரசுப் பள்ளிகளில் பயின்று, இன்று நல்ல நிலையில் இருக்கும் முன்னாள் மாணவர்களும் தங்களது பள்ளிகளை மேம்படுத்த தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இதுஒருபுறம் என்றால், மற்றொரு புறத்தில் அரசுப் பள்ளி மாணவர்களை எந்தெந்த வழிகளில் முன்னுக்கு கொண்டுவரலாம் என அயராது உழைத்து வருகின்றனர் அங்கு பணிபுரியும் ஆசியர்கள்.


 அப்படிப்பட்ட கவனிக்கத்தக்க ஆசிரியர்களில் ஒருவர்தான் ஆசிரியர் செல்வம்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் செல்வம்.

அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவரின் கனவு, லட்சியம் எல்லாமே தன் பள்ளியையும், பள்ளிகளில் படிக்கும் மாணவர்களையும் தங்களின் திறமையால் விண்ணை பார்க்க வைக்க வேண்டும் என்பதுதான்.


 வறுமை, தொழில்நுட்ப குறைபாடு எதுவும் மாணவர்களின் கல்வித் திறமையை பாதித்துவிடக் கூடாது என்பதற்காக தன்னால் முயன்ற உதவிகளை முன்நின்று செய்து வருகிறார். இதற்காக பள்ளியில் தன் முயற்சியால் ஸ்மார்ட் கிளாஸ் கொண்டுவந்துள்ளார்.


 நண்பர்கள், மாணவர்களின் நலனுக்காக உதவி செய்ய முன்வருபவர்கள் ஆகியவர்கள் மூலம் நிதி பெற்று இந்த ஸ்மார்ட் கிளாஸை பள்ளியில் கொண்டுவந்துள்ளார்.

பள்ளிப் புத்தகத்தை அப்படியே மனப்பாடம் செய்யக் கூடாது. அதில் உள்ள உள்ளார்ந்த விஷயங்களை புரிந்துக் கொள்ள வேண்டும்.


 அப்படியான பயிற்சி இருக்கும்போது மாணவர்களின் சிந்திக்கும் திறன் வளர்வதோடு புதிய புதிய கண்டுபிடிப்புகளும் உருவாகும் என்பது ஆசிரியர் செல்வத்தின் எண்ணம். இதற்காக மாணவர்களுக்கு நல்ல ஒரு வழிகாட்டியாக இருந்து புதியவற்றை கண்டுபிடிக்க ஊக்குவித்து வருகிறார்.


 இதனால் பெரியார் அறிவியல் மையம் மற்றும் தேசிய அறிவியல் கழகம் ஆகியவவை இணைந்து நடத்தும் போட்டியில் தொடர்ந்து 6 ஆண்டுகள் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான விருதுகளை இப்பள்ளி மாணவர்கள் பெற்றுள்ளனர்.

தமிழக அரசின் சார்பில் கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுவது வழக்கம்.


 துடிப்புமிக்க இளம் ஆசிரியர்களை கண்டு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை கடந்த ஜனவரி மாதம் பெற்றார் ஆசிரியர் செல்வம். விருதுடன் 10,000 உதவித்தொகையும் ஆசிரியர் செல்வத்திற்கு வழங்கப்பட்டது.


ஆனால் இந்த உதவித்தொகையை தான் பயிற்றுவித்து வரும் பள்ளிக்கே கொடுக்க முன்வந்தார் ஆசிரியர் செல்வம். அரசுப் பள்ளியில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்க விருக்கும் நிலையில், மாணவர்களுக்கு பிடிக்கும் வகையில் கழிவறையை உருவாக்கியுள்ளார்.

 அதாவது கழிப்பறையில் மதில்களில் சுத்தம் குறித்த விழிப்புணர்வு வாசகங்களுடன் படங்களையும் வரைய உதவி புரிந்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் மாணவர்களுக்காக வழங்கப்படும் சிறந்த வழிகாட்டிக்கான குருஷேத்ரா விருதையும் ஆசிரியர் செல்வம் பெற்றுள்ளார். தொடர்ந்து மாணவர்களின் நலனுக்காக பல உதவிகளை செய்து வரும் ஆசிரியர் செல்வத்தை செயலை பலரும் பாராட்டியும் வருகின்றனர்.

No comments:

Post a Comment