ரெப்கோ வங்கியில் இளநிலை உதவியாளர் வேலை வேண்டுமா..? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 9, 2019

ரெப்கோ வங்கியில் இளநிலை உதவியாளர் வேலை வேண்டுமா..?

ரெப்கோ வங்கியில் நிரப்பப்பட உள்ள 40 இளநிலை உதவியாளர் மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Assistant/Clerk

காலியிடங்கள்: 40

சம்பளம்: மாதம் ரூ.11,765 - 31,540

வயதுவரம்பு: 21 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

 பொது மற்றும் இதர பிரிவினருக்கு ரூ.700. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ரூ.400 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி கார்டு மற்றும் ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.repcobank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, கோயமுத்தூர், மதுரை, திருச்சி, சேலம் மற்றும் திருநெல்வேலி

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.repcobank.com/uploads/career/6.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.06.2019

No comments:

Post a Comment