ஜுலை முதல் விமானப் பயணக் கட்டணம் உயர்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 9, 2019

ஜுலை முதல் விமானப் பயணக் கட்டணம் உயர்வு

இந்திய விமான நிலையங்களில் மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு விமான நிலைய ஆணையம் அதற்கான கட்டணத்தை செலுத்தி வருகிறது. ஆனால் இதற்கான கட்டணங்கள் வெகுநாட்களாக நிலுவையில் உள்ளன. அதை ஒட்டி மத்திய பாதுகாப்புப் படை கடந்த 2017 ஆம் வருடம் ஒரு கடிதம் எழுதி நினைவூட்டியது.

அந்த கடிதத்தில் அப்போது டில்லி விமான நிலையத்தில் இருந்து வர வேண்டிய கட்டண நிலுவை தொகை மட்டும் ரூ. 655.40 கோடி உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு டில்லி விமான நிலையம் அளித்த பதிலில் பயணிகளிடம் இருந்து பெறப்படும் பாதுகாப்புக் கட்டணங்கள் மிகவும் குறைவாக உள்ளதால் பாதுகாப்புக் கட்டணத்தை அளிப்பதில் சிரமம் உண்டாவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.அதை ஒட்டி மத்திய விமான போக்குவரத்து துறை அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமான சேவை நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தியது. விமான சேவை நிறுவனங்களும் பாதுகாப்புக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என ஏற்கனவே முறையீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் பயணிகளிடம் வசூலிக்கப்படும் பாதுகாப்பு கட்டணங்களை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி வரும் ஜூலை மாதம் 1 முதல் உள்நாட்டு பயணிகளுக்கான பாதுகாப்புக் கட்டணம் தலா ரூ.150 ஆகிறது. வெளிநாட்டில் இருந்து வந்து இறங்கும் பயணிகளுக்கான பாதுகாப்புக் கட்டணம் $4.85 ஆகிறது. இந்த கட்டணம் பயணக் கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்கப்பட உள்ளது. இதனால் வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் விமான பயணக் கட்டணம் அதிகரிக்க உள்ளது.

No comments:

Post a Comment