ரயில்வே துறை வெளியிட்ட அசத்தல் திட்டம்!! குஷியில் ரயில் பயணிகள்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 9, 2019

ரயில்வே துறை வெளியிட்ட அசத்தல் திட்டம்!! குஷியில் ரயில் பயணிகள்!

நாட்டின் மிகப்பெரிய துறையான ரயில்வே துறையான முதன்முறையாக, ஓடும் ரயில்களில், மசாஜ் செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மசாஜ் செய்யும் முறை அறிமுகம் செய்யப்படுத்துவது தொடர்பாக, மேற்கு ரயில்வே மண்டலம் சார்பில் பரிந்துரை அளிக்கப்பட்டது. ரயில்வே மண்டலம் அளித்த பரிந்துரையில் ரயிலில் வரும் பயணிகளுக்கு ஓடும் ரயில்களில், தலை மற்றும் பாதங்களை மசாஜ் செய்துவிட, 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளன

இத்திட்டம் முதல்முறையாக மேற்கு ரயில்வே மண்டலங்களான புதுடெல்லி-இந்தூர் இண்டர்சிட்டி, டேராடூன்-இந்தூர், அமிர்தசரஸ்-இந்தூர் உள்ளிட்ட 39 ரயில்களில், தேவைப்படும் ரயில் பயணிகளுக்கு வெறும் 100 ரூபாய் கட்டணத்தில் தலை மற்றும் பாதங்களை மசாஜ் முறையை அறிமுகப்படுத்த, ரயில்வே நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.

மசாஜ் செய்வதற்காக ஒரு ரயிலில் 3 முதல் 5 மசாஜ் நிபுணர்கள் இதற்காக பணியமர்த்தப்படுவார்கள் என தெரிகிறது.

No comments:

Post a Comment