மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் அதிரடி உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 13, 2019

மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் அதிரடி உத்தரவு

மத்திய அமைச்சர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கு தங்கள் அலுவலகம் வர வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

பணியில் பிறருக்கு முன்னுதாரணமாக விளங்கும்படியும் வீட்டில் இருந்தபடியே பணிகளை கவனிக்கும் கலாசாரத்திற்கு முடிவுகட்டுமாறும் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் அமலில் இருக்கும் 40 நாட்களில் அமைச்சர்கள் வெளிநாடு செல்வதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.


 அமைச்சகத்தின் பணிகளில் வளர்ச்சிகள் குறித்து அதிகாரிகளுடனும் எம்பிக்களுடனும் ஆலோசனை நடத்துமாறும் மூத்த அமைச்சர்களுக்கு மோடி அறிவுறுத்தியுள்ளார்.

அனைத்து அமைச்சகங்களும் 5 ஆண்டு திட்டம் ஒன்றை வகுத்து அதன் அடிப்படையில் முதல் நூறு நாட்களுக்குள் எடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகளை செயல்படுத்துமாறும் அமைச்சர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment