நெல்லை, குருவாயூர் ரயில்கள் நேரம் மாற்றம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 28, 2019

நெல்லை, குருவாயூர் ரயில்கள் நேரம் மாற்றம்

திருநெல்வேலி, தஞ்சை, குருவாயூர் எக்ஸ்பிரஸ் உட்பட 49 ரயில்கள் ஜூலை 1 முதல் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.தெற்கு ரயில்வேயின் புதிய ரயில் கால அட்டவணை ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படுகிறது.


 சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் மற்றும் வந்து சேரும் 49 ரயில்கள் ஐந்து முதல் 25 நிமிடங்கள் வரை வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளன


.நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில்கள்*


 சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூருக்கு இயக்கப்படும் ரயில் காலை 8:15க்கு பதிலாக 8:25 மணிக்கு புறப்படும்.


 நெல்லை எக்ஸ்பிரஸ் இரவு 8:10க்கு பதிலாக இரவு 7:50க்கும்,


 தஞ்சை உழவன் எக்ஸ்பிரஸ் இரவு 10:40க்கு பதிலாக 10:55 மணிக்கும் புறப்படும்.


எழும்பூரில் இருந்து இரவு 7:50க்கு புறப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இரவு 8:10க்கு புறப்படும்

No comments:

Post a Comment