நிபா வைரஸில் இருந்து நம்மைப் பாதுகாப்பது எப்படி ? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 4, 2019

நிபா வைரஸில் இருந்து நம்மைப் பாதுகாப்பது எப்படி ?

நமது அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் தற்போது பரவி வருகிறது. இதை கேரளாவை ஆளும் பினராயி விஜயன் தலைமையிலான (இடதுசாரி ) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு இதை உறுதி செய்துள்ளது.கடந்த ஆண்டு நிபா வைரஸால் 17 பேர் உயிரிழந்து குறிப்பிடத்தக்கது. கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில்,23 வயது இளைஞர் ஒருவர் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தற்போது நிபாவைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.அவர் தனது சக மாணவர்கள் 22 பேருடன் கல்விப்பயிற்சிகாக திருச்சூருக்குச் சென்ற போது இந்தக் காய்ச்சல் ஏற்பட்டதாகத் தெரிகிறது.இந்நிலையில் மற்ற மாணவர்கலுக்கும் மருத்துவ சோதனை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இந்த நிபா வைரஸிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி என்று பார்க்கலாம்:

இந்த நிபா வைரஸ் வவ்வால்களின் எச்சில், எச்சம் போன்றவற்றில் இருந்து பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவ்வால்கள் பெரும்பாலும் மரத்தில் வசிப்பதால், அங்கு அவற்றி எச்சில்கள் இருக்கும். அதனால் மரம் ஏறாமல் இருப்பது நலம்.

மேலும் குழந்தைகளை மரத்தின் அருகில் விளையாடம் இருக்கச் செய்வது முக்கியம். முக்கியமாக, நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ந்து தனிவார்ட்டில் வைத்துதான் சிகிச்சை அளிக்கவேண்டும்.

நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைத் தொட்டுப்பேசுதல் கூடாது. மேற்சொன்ன நடவடுக்கைகளை மேற்கொள்வதன் வாயிலாக நாம் நிபா வைரஸிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள முடியும்.

No comments:

Post a Comment