ஹால்டிக்கெட் இல்லாவிட்டால் தகுதித்தேர்வு எழுத வரும் ஆசிரியர்களுக்கு புகைப்படம், அடையாள சான்று கட்டாயம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 4, 2019

ஹால்டிக்கெட் இல்லாவிட்டால் தகுதித்தேர்வு எழுத வரும் ஆசிரியர்களுக்கு புகைப்படம், அடையாள சான்று கட்டாயம்

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் ஹால்டிக்கெட்டில், புகைப்படம் இல்லாவிட்டால், புகைப்படம் மற்றும் அடையாள சான்றை கட்டாயம் கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு, வரும் 8, 9ம் தேதிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் முதல்தாள் தேர்வினை எழுத 8,227 பேரும், இரண்டாம் தாள் தேர்வினை எழுத 22,168 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கென மாவட்டம் முழுவதும் 72 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தேர்வு எழுத வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஹால்டிக்கெட்டில் தேர்வர்களின் புகைப்படம் இடம்பெற வேண்டும். ஆனால், ஒருசிலரின் ஹால்டிக்கெட்டில் புகைப்படம் இல்லாததால், தேர்வர்கள் அச்சமடைந்தனர். இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கும், புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், மாற்று ஏற்பாடுகளை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.


இதுதொடர்பாக, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி கூறுகையில், 'ஆசிரியர் தகுதித் தேர்விற்காக இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால்டிக்கெட்டில் புகைப்படம் இல்லையென்றால், இரண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றில் ஒரு புகைப்படத்தினை ஹால்டிக்கெட்டில் ஒட்டி, அரசிதழில் பதிவுபெற்ற அலுவலர்களிடம் சான்றொப்பம் பெற வேண்டும்.

மற்றொரு புகைப்படைத்தை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரிடம் அளித்து, வருகைப் பதிவுத்தாளில் ஒட்டச் செய்ய வேண்டும். மேலும், ஹால்டிக்கெட்டில் புகைப்படம் சார்ந்த பிரச்சனைகளுக்குரிய தேர்வர்கள் தேர்வு எழுத வரும்போது, தங்களுடைய அசல் அடையாளச் சான்றாக, பான்கார்டு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட், லைசென்ஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் கொண்டுவர வேண்டும்,' என்றார்.

No comments:

Post a Comment