துப்புரவுத் தொழிலாளர் காலிப்பணியிடங்கள்: ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 4, 2019

துப்புரவுத் தொழிலாளர் காலிப்பணியிடங்கள்: ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் காலியாகவுள்ள துப்புரவுத் தொழிலாளர் பணியிடங்களுக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் மொத்தம் 28 துப்புரவுத் தொழிலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளன. இதில் விருப்பமுள்ள தகுதியான நபர்கள் விண்ணப்பங்களை நேரிலோ, தபால் மூலமோ சமர்ப்பிக்கலாம். ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், அனைத்து வகுப்புகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு குறைந்த பட்ச வயது 18, அதிகபட்ச வயது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோருக்கு (இஸ்லாமியர் உள்பட) குறைந்த பட்ச வயது 18, அதிகபட்ச வயது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர பிரிவினருக்கு அதிகபட்ச வயது 30-க்குள்ளாக இருத்தல் வேண்டும்.
கல்வித் தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்கவேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது பெயர், முகவரி, பிறந்ததேதி, வயது, சாதி, வருமானம், இருப்பிடம், குடும்ப அட்டை, ஆதார், வேலைவாய்ப்பு அட்டை, முன்னுரிமைக்கான சான்று, 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகிய விவரங்களுடன் ஜூன் 7-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 2-ஆவது தளத்தில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் நேரில் வழங்கவேண்டும். சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment