சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாட பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 8, 2019

சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாட பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவு

சர்வதேச யோகா தினத்தன்று, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து கொண்டாட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.

ஜூன் 21-ஆம் தேதி, சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது.


 இதை முன்னிட்டு, நாடு முழுவதிலும் உள்ள பல்கலைகழகங்களில் அதை கொண்டாடும் வகையில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து யோகாசனங்கள் செய்ய வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, யுஜிசி செயலர் ராஜ்னிஷ் ஜெயின் அனைத்துப் பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஜூன் 21-ஆம் தேதி காலை 7 மணி முதல் 8 மணி வரை யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோரும் பங்கேற்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment