சிறப்பாக செயல்படாத 2000 ஊழியர்களை அதிரடியாக நீக்கிய நிறுவனம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 8, 2019

சிறப்பாக செயல்படாத 2000 ஊழியர்களை அதிரடியாக நீக்கிய நிறுவனம்

உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, ஐபிஎம் நிறுவனத்தில் சிறப்பாக செயல்படாத 2,000 ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

உலகின் அதிக வருமானம் ஈட்டும் ஐடி கம்பெனியான ஐபிஎம் நிறுவனத்தில் உலக அளவில் சுமார் 3.50 லட்சம் பேர் வேலை பார்க்கிறார்கள். தற்பொழுது அந்நிறுவனம் 2,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. இந்திய கிளைகளியில் இருந்து மட்டும் சுமார் 300 ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது


இதுகுறித்து ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-


ஐபிஎம் நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் இலக்குகளை நோக்கி வேலை பார்க்காத 2,000 ஊழியர்களை நீக்கியுள்ளோம். ஐபிஎம் நிறுவனம் தன்னுடைய பிசினஸுக்கு மறு வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆகையினால் நிறுவனத்தில் மற்ற ஊழியர்களுடன் போட்டி போட முடியாத அளவுக்கு குறைவாகச் செயல்படும் ஊழியர்களை மட்டும் தேர்ந்தெடுத்து நீக்கியுள்ளோம்


ஒரு புறம் சரியாக பணிபுரியாதவர்களை எல்லாம் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, மறு புறம் ஐபிஎம் எந்தெந்த துறைகளில் எல்லாம் புதிதாக வளர வேண்டுமோ, அந்தந்த துறைகளில் எல்லாம் கூடுதலாக ஊழியர்களை சேர்த்துக்கொண்டிருக்கிறோம்.


இவ்வாறு அவர் கூறினார்.


மொத்த உலக டெக்னாலஜி சந்தையில் கடந்த ஆறு வருடங்களாக ஐபிஎம் நிறுவனம் பெரிய அளவில் முன்னேறாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. கடந்த 2018-ம் ஆண்டு வருவாய் வெறும் ஒரு சதவிகிதம் மட்டுமே அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment