சவுதி அரேபியாவில் டாக்டர், நர்ஸ் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 8, 2019

சவுதி அரேபியாவில் டாக்டர், நர்ஸ் வேலை

சவுதி அரேபியாவில்,முன்னணி மருத்துவமனையில் பணிபுரிய,டாக்டர்கள், நர்ஸ்களிடம்,விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.


சவுதி அரேபியா நாட்டின், ரியாத் நகரில் உள்ள, முன்னணி மருத்துவமனைக்கு, 55 வயதிற்கு உட்பட்ட, இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ள, ஆண், பெண் மருத்துவர்கள்; 35 வயதிற்கு உட்பட்ட, மருந்தாளுனர்கள்.'எக்ஸ்ரே டெக்னிஷியன்'கள், ஆய்வகப் பணியாளர்கள், 'பிசியோதெரபிஸ்ட்'கள்; டிப்ளமா அல்லது பி.எஸ்சி., தேர்ச்சி பெற்ற செவிலியர்கள் மற்றும் பல்வேறு பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.

தகுதி உள்ளவர்கள், தங்களின் சுயவிபரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன்,கல்வித்தகுதி, அனுபவம்,பாஸ்போர்ட், ஆதார் ஆகியவற்றின் நகல்களை, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன்,
ovemclsngmail.com
என்ற, இ - மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.மேலும் விபரங்களுக்கு,
www.omcmanpower.com
என்ற, இணையதளத்தை பார்வையிடலாம்.


அல்லது, 044 - 22505886, 22500417, 8220634389 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment