சூர்யா கேட்ட 10 கேள்விகள் ! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 17, 2019

சூர்யா கேட்ட 10 கேள்விகள் !

பள்ளிக்கல்வித்துறையில் உள்ள குறைகளை பட்டியலிட்டு நடிகர் சூர்யா கேட்ட 10 கேள்விகளுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

பத்து கேள்விகள் :

முப்பது கோடி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் புதிய கல்வி கொள்கையை நிறைவேற்ற அவசரம் ஏன்?
நாட்டில் 1848 பள்ளிகள் மூடப்படப்படவுள்ளதே இதற்கு பதில் ?


மூன்று வயது குழந்தையால் மூன்று மொழிகள் படிக்க முடியுமா ?


கல்வியில் சிறந்த நாடுகளில் 8ஆம் வகுப்பு வரை தேர்வு வைரை தேர்வு இல்லை என்கிறபோது, 3,5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது எப்படி சிறந்து கல்வி முறையாகும் ?



நுழைவுத் தேர்வு, பொதுத் தேர்வு, தகுதித் தேர்வு, நீட் தேர்வு என மாணவர்கள் தொடர்ந்து தேர்வுகளை எழுதினால் வாழ்க்கையை படிப்பது எப்போது

சுமார் 80 லட்சம் ஆசிரியர்களை கொண்ட இந்தியாவில் புதிய கல்வி கொள்கையை ஒரேயொரு ஆசிரியர் அமைப்பும், மாணவர் அமைப்பும் சேர்ந்து தீர்மானிப்பது எந்த வகையில் நியாயம் ?


1.80 லட்சம் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் ஒருவர் மட்டுமே பாஸ் என்றால் இதை எப்படி பார்ப்பது ?


50 ஆயிரம் கல்லூரிகள் 12 ஆயிரமாக குறைக்கப்படுவதும், பயிற்சி வகுப்புகள் அதிகரிப்பதும் தான் புதிய கல்வி கொள்கையா ?


விதவிதமான கல்வி முறைகளை வைத்துக்கொண்டு தேர்வு மட்டும் பொதுவானது என்பது எப்படி சரியாகும் ?


எதிர்கால தலைமுறையின் தலையெழுத்து எழுதப்படும் நேரத்தில் நாம் இன்னும் விழிப்படையாமல் இருக்கிறோமே ஏன் ?

No comments:

Post a Comment