இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், நான்காம் சுற்றுக்கான, கட்டணம் செலுத்தும் கால அவகாசம் மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இன்ஜினியரிங் ஆன்லைன் கவுன்சிலிங் நடவடிக்கைகள், ஜூலை, 3ல் துவங்கின.
மொத்தம், நான்கு கட்டங்களாக ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. 'கட் ஆப்' மதிப்பெண் அடிப்படையில், மாணவர்கள், நான்கு சுற்றுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம், ஒரு லட்சம் பேர், இந்த கவுன்சிலிங்கில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதல் மற்றும் இரண்டாம் சுற்றுக்கான கவுன்சிலிங் நடந்து முடிந்து உள்ளது.
மூன்றாம் சுற்று மாணவர்களுக்கான விருப்பப் பதிவு, இன்று துவங்க உள்ளது. வரும், 20ம் தேதி, மாலை, 5:00 மணிக்குள், விருப்ப பாடங்கள் மற்றும் கல்லுாரிகளை பதிவு செய்ய வேண்டும்.
அதேபோல், நான்காம் சுற்றில் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு, இன்று முதல் கட்டணம் செலுத்த, அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, தர வரிசை அடிப்படையில், கால அவகாசத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் தரவரிசை அடிப்படையில், இன்று முதல், 22ம் தேதி வரை கட்டணம் செலுத்தலாம் என, கவுன்சிலிங் கமிட்டி அறிவித்துள்ளது.
முறைகேடு இல்லை'
இன்ஜினியரிங் ஆன்லைன் கவுன்சிலிங்கில், எந்த முறைகேடும் நடக்கவில்லை' என, உயர்கல்வி துறை அறிவித்துள்ளது
.இதுகுறித்து, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனர், விவேகானந்தன் வெளியிட்ட செய்திக்குறிப்பு
:இன்ஜினியரிங் ஆன்லைன் கவுன்சிலிங், 100 சதவீதம் வெளிப்படை தன்மையுடன் நடக்கிறது
பல்வேறு பல்கலைகளில் அனுபவம் பெற்ற பேராசிரியர்கள் இணைந்து நடத்துகின்றனர். இதில், எந்த முறைகேடும் நடக்கவில்லை.
மாணவர்களுக்கு பிரச்னைகள் இருந்தால், 044 - 2235 1014, 044 - 2235 1015 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்
.கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்கள், தங்களுக்கான, 'யூசர் ஐடி' மற்றும் பாஸ்வேர்டை, வேறு நபர்களிடம் தர வேண்டாம்.
ஆன்லைன் கவுன்சிலிங்கில் சந்தேகங்கள் இருந்தால், அருகில் உள்ள இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டியின் சேவை மையத்தை அணுக வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

No comments:
Post a Comment