பால்வீதியில் புதிய 28 நட்சத்திரங்களை ஆர்யபட்டா ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமிக்கு அருகே ‘குளோபுலர் க்ளஸ்டர் என்ஜிசி 4147’ என்ற விண்மீன் தொகுப்பை இங்கிலாந்து விஞ்ஞானி வில்லியம் ஹெர்ஸ்செல் என்பவர் கடந்த 1784ம் ஆண்டு கண்டுபிடித்தார்.
பால்வெளியில் இது மிகவும் பழமையான விண்மீன் கூட்டம் என்றாலும், இவை எங்கிருந்து உருவானது, என்பது இன்னும் தெளிவாக கண்டறியப்படவில்லை.
விண்வெளி ஆய்வுக்காக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடால் அருகே 3.6 மீட்டர் அளவுள்ள டெலஸ்கோப் நிறுவப்பட்டது. இங்கு ஆர்யபட்டா ஆராய்ச்சி மைய (ஏரியஸ்) விஞ்ஞானிகள் குழுவினர் டாக்டர் ஸ்னேஹ் லதா மற்றும் டாக்டர் ஏ.கே.பாண்டே தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.
இவர்கள் குளோபுலர் விண்மீன் தொகுப்பில் 28 புதிய நட்சத்திரங்களை கண்டுபிடித்துள்ளனர். இவற்றின் பிரகாசத்தன்மை சீராக இல்லாமல் விரிவதும், சுருங்குவதுமாக உள்ளன. இந்த ஆராய்ச்சியின் விவரங்கள், அடுத்த மாதம் வெளியாகும் வான் அறிவியல் இதழில் வெளியிடப்பட உள்ளன

No comments:
Post a Comment